வெள்ளையனுக்காய் குண்டு போட்ட யாழ்ப்பாணம்!

இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் முதாலவது அங்கீகரிக்கப்பட்ட போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணமாம் (Jaffna)!

நேற்று சும்மா நம் சுவின்பெர்ன் நூலகத்தில் மேய்ந்தபொழுது ஒரு புத்தகம் தட்டுப்பட எடுத்து வாசித்தால் அது 100 க்கு 100 வீதம் உண்மை. கதை இப்படி போகிறது பாருங்கள்.

முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் (தற்போது 985,000 குதிரைவலு) இயங்கி வந்தன. மரம், துணி, வயர்களால் உருவாக்கப்பட்ட இவை உலகப் போரின் முன் யுத்தத்திற்காய் பாவிக்கப்படவில்லை. முதலாம் உலகப்போரின் போது எதிரிகளை வேவு பார்க்கவும், குண்டுவீசவும் சிறந்த பொறியாக விமானம் கருதப்பட்டது. எனினும் அவற்றின் வடிவமைப்பின் காரணமாக அவை எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின. விமானத்தை உருவாக்கும் திறன் ஒருபுறம் இருக்க அதை உருவாக்க தேவையான பணம் இன்றித் திணறியது இங்கிலாந்து அரசு. உடனே தன் காலனித்துவ நாடுகளுக்கு இந்த செய்தியை அனுப்பி வைத்தது. வரிகள் மூலமாக இந்த பணத்தை திரட்ட முடியாது என்று அறிந்த மலேசியாவை நிர்வகித்த டாக்டர். அல்மா பேக்கர் என்பவர் “போர்விமானதுக்கு உதவி செய்” (fund-a-fighter-plane) என்ற பிரசாரத்தை ஆரம்பித்தார். இந்த பிரசாரம் அதிக பணம் தருபவர்கள் ஆசைப்படும் பெயர் அந்த விமானத்துக்கு வைக்கப்படும் என்றும் உறுதி கூறியது. யாழ் மல்லாகத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு. சுப்ரமணியம் அவர்கள் இந்த பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு யாழில் இருந்து அன்றே மலேசியாவில் குடியேறிய தமிழர்களிடம் பணம் சேர்த்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக அளித்தார். அன்றா நாளில் இதற்காக கிட்டத்தட்ட 2250 ஸ்டெர்லிங் பவுண்ட் சேர்க்கப்பட்டது.

இந்த விமானம் இரட்டை சிறகுடைய (biplane ரகம்) இரண்டு பயணிகளை கொண்டு செல்லக்கூடிய, குண்டு போடவும், அதே நேரம் துப்பாக்கிச் சமரிலும் ஈடுபடக்கூடிய விமானமாக காணப்பட்டது. ஈழத் தமிழர்களால் நிதி உதவி அளிக்கப்பட்டதாலும், வரலாற்றில் நம் பெயர் நிலைக்கும் என்ற நம்பிக்கையிலும் இவ் விமானத்திற்கு Jaffana என்று நம்மவர்கள் பெயர் சூட்டினார்கள். பிரித்தானியாவின் அரச விமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட Jaffna ஜெர்மனியர்களின் குண்டு மழைக்குள் தீரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தி முதலாம் உலகச் சமர் முடிவில் அருங்காட்சியத்தில் ஓய்ந்தது. கடல் கடந்த எங்கோ ஓர் தேசத்தின் நூற்றாண்டு கடந்து கற்பழிக்கப்பட இருக்கும் ஒரு ஊரின் பெயரில் உள்ள விமானம் தங்களை இந்தளவு ஆட்டிப்படைக்கும் என்று ஜெர்மனியர்கள் கனவிலும் நிலைக்கவில்லை.

கடந்த சில தசாப்தங்களில் மட்டுமல்ல நூற்றாண்டு கடந்தே போரில் ஆர்வமுள்ளவர்களாக ஈழத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று. உடல் வலிமை தேவைப்பட்ட போது உடலாலும், அறிவின் பலம் தேவைப்பட்டபோது அறிவாலும், நிதித் தேவைகளில் நிதி வழங்கியும் அவர்கள் மறவர்களாகவே வாழ்ந்தார்கள் போலும்.

 இன்று நாங்கள் இங்கிலீசு பேச ஆசைப்பட்டு இங்கிலாந்தில் கழிப்பறை கழுவினாலும் இங்கிலாந்து அர மானத்தை அன்று காத்தவர்கள் நாங்கள்தான். கதை மறைக்கப்பட்டுவிட்டது, இன்றைக்கு உங்களை நாட்டை விட்டுப் போகச்சொன்னால் இந்தக் கதையை சொல்லிவிட்டு வாருங்கள். இது கட்டளை அல்ல எச்சரிக்கை!

இதை வாசிதுவிட்டும் PR கல்யாணம் கட்ட, pizza போட, சாமான் நிறுக்கப் போறவங்களுக்கு ஒரு கேள்வி. ஏன்டா இன்னும் உயிரோட இருக்கீங்க?

அன்று என் முதலிரவு!

எப்போதும் முதல் இரவுகள் சுவாரசியமானவை. அன்று என் முதலிரவு பெரும் ஆவலுடன் ஆடி அசைந்துவரும் என்னவளுக்காய் காத்திருந்தேன். அவளுக்கு என் தவிப்பு தெரியப்போவதில்லை, அவளுக்கென்று அவளே வகுத்துக்கொண்ட சில வரைமுறைகளை அவளே பின்பன்றுவதில்லை. வேண்டுமென்றே அவள் தாமதமாக வருவதில்லை, சில சடங்குகளின் நிமிர்த்தம் அவள் வருகை தாமதமாகிறது போலும். வரும் அவள் ஏற்கனவே பலரால் நிறைந்தவளா? இல்லை எனக்கே எனக்காய் காலியாக வருவாளா என்று என்னுள் சில கேள்விகள். அவனவனுக்கு ஆயிரம் இடங்களில் முதலிரவு எனக்கோ உலகிலே வாழ்வதற்கு அதி சிறந்த இடமான மெல்பேர்னில் இன்ப இரவு. என் முதலிரவு அறை பெரிதாக தமிழ் சினிமா முதலிரவு அறைகள் போல் அலங்கரிக்கப்படவில்லை. என் முதலிரவு அறையில் இன்னும் இரண்டு அன்பர்கள் வந்து அமர்ந்துகொண்டார்கள்.

அட இன்னும் இருவரா என்று ஜொள்ளு விடும் அன்பர்களுக்கு ஒரு சின்னத் தகவல், நான் முதலிரவு என்று சொன்னது நான் முதல் முதலாக night shift செய்துவிட்டு வீடு வந்த இரவை. என்னவள் என்பவள் யார்? – Melbourne Nighttime train. இப்போது இதை வாசிக்கத் தொடங்கிய பல அன்பர்கள் மூடிவிட்டு வீடு கிளம்புவதை அவதானிக்க முடிகிறது, மேற்கொண்டு நிக்கும் அன்பர்களுக்கு என் கதையை சொல்கிறேன்.

நான் வேலை செய்யும் இடத்திலிருந்து வீடு வர இரண்டு train எடுக்க வேண்டும். அதெல்லாம் இங்கு சாதாரணம். சூழல் பற்றி முக்காடு போட்டு அழும் முதல்வர்கள் எல்லாம் கோட் போட்டுகொண்டு உச்சி வெயிலில் கோச்சியில் போவார்கள். கவனிக்க இவர்கள் அம்மா அப்பா செத்தா எல்லாம் அழமாட்டாங்க. முதலாவது டூரோங்கா நிலையத்தில் இருந்து பெர்ன்லி வந்த பிறகுதான் இந்தக் காத்திருப்பு. பொதுவாக இரவில் நம்ம ரயில்கள் எல்லாம் இலங்கை 155 பஸ் போலதான் ஓடும். அன்றைய இரவை இலியானா இரவு என்று சொன்னால் மிகையாகாது, அவ்வளவு ஜில்லென்று இருந்தது.

வந்திருந்த அன்பரில் ஒருவர் வெள்ளையர், மற்றவர் கொஞ்சம் பழகிய முகம். பொதுவாக ஆஸ்திரேலியர்கள் அமைதியை விரும்பமாட்டார்கள். ஆக வழக்கம்போல வெள்ளை அன்பரே பேச்சை தொடக்கினார். முதலில் நாங்கள் எந்த நாடு என்றுதான் கேட்டார். அட என்ன ஆச்சரியம் மற்றவர் நம்மாள், இலங்கையராம். முதலில் வெள்ளையர் சுவாரசியமாக பேசினார், போகப் போக எலெக்ட்ரிக் வாளில் மாட்டுப்பட்ட மாடு போல நான் ஈனசுவரத்தில் மனதில் முனகினேன். அவ்வளவு ரம்பம்.

வெள்ளை ஆசாமி திடீரென்று தனது பேச்சை நியூட்டன், இரசாயனவியல், பௌதீகம் என்று பேச்சை மாற்றினார். எனக்கு ஒபாமாவை பார்த்த ஒசாமா மாதிரி நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. ஏற்கனவே சம்பந்தன், தில்லைநாதன் என்று பலருக்கு கெட்டவார்த்தையால் மனதுக்குள் அபிஷேகம் செய்த நினைவும் வந்தது. ஆசாமி எப்படியும் பேச்சை நிறுத்தமாட்டார் என்று தெரிய கொஞ்சம் நமக்கும் தெரிஞ்ச fieldக்கு கதையை மாத்துவம் என்டு கிரிக்கெட்டை பற்றி பேச்செடுத்தேன். உடனே அவர் அழகான ஆங்கிலத்தில் “sorry, basically I am from Germany, I dont know much about cricket” என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். பிறகென்ன ம*** “I am Australian” என்டு முதல்ல சொன்னானோ தெரியா.

திடீரென்று அந்த இலங்கை நண்பரும் கழண்டுகொண்டார், நான் விதியை நொந்தவாறு கதைகளை கேட்டுகொண்டிருந்தேன். ஏற்கெனவே SLIIT lectures நேரம் கண்ணை திறந்து கொண்டு தூங்குவதுக்கு பெரும் பயிற்சிகள் எடுத்திருப்பதால் இந்த ஆசாமியை அந்த டெக்னிக்கில் சமாளிக்க முடிந்தது. ஒரு வழியாக என் train வந்தது, ஏழரைச் சனி முடிந்தாலும் இந்த சனி என்னை விடுவதாக இல்லை. trainஇலும் தொத்திக்கொண்டது. இன்னும் ரெண்டு station தானே என்று அசட்டையாக இருக்க மேலும் ஒரு atom bombஇணை இந்தப் புள்ள பூச்சி மேல போட்டது அந்தப் பெருச்சாளி. நான் சொல்வது உங்களுக்கு விளங்கவில்லை இதை நான் உங்கள் வீடுவரை வந்து விளங்கப்படுத்த விரும்புகிறேன் என்றார். இவன் நல்லவனா, கெட்டவனா? சைக்கோவா இல்லை வைகோவா? கொள்ளைமாட்டும் அடிப்பானா இல்லை கொலையும் செய்வானா? என்றும் ஆயிரம் கேள்வி. உயர்தர பரீட்சைக்கு பின் நான் ஆதிகம் பதில் தெரியாமல் முழித்தது இந்தக் கேள்விகளுக்குத்தான். ஏற்கனவே இவரின் குட்டி editionபோல திவாகர் வீட்டில் இருப்பதால், எதற்கு வம்பென்று வாழ்கையில் சொல்லாத பொய் எல்லாம் சொல்லி ஒருவழியாக Glenferrie stationஇல் வந்து குதித்தேன். நாத்திகம் பேசிவந்த பிருந்தாபன் இவரிடம் இருந்து தப்பிக்க ஆறேழு கோவில்களில் நேர்த்திக் கடன் வைத்தார் என்ற செய்தியுடன் இந்தக் கதை முடிகிறது. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.