ஆசிரியர் தின சிறப்புக் கவிதை – 2007
இந்தக் கவிதை 2007 ஆசிரியர் தினத்திலே வாசிக்கப்பட்ட கவிதை. உண்மையில் நான் கவிதைகளைத்தான் அதிகமாக எழுதியிருக்க வேண்டும் ஆனால் விதியின் பயனாக கட்டுரைகள் அதிகமாக தந்திருக்கிறேன். அன்றைய தினத்திலே ஆசிரியர் தினம் சம்பளப் பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்டது. இந்தக் கவிதை இந்துக் கல்லூரியிலே எனக்கு அதிகமாக பிடித்த இடத்தில், அதாவது பிரதான வாசளுடன் உள்ள ஆல மரத்தின் கீழ் எழுதப்பட்டது. இனி கவிதை…..
எழுத்தறிவித்தவன் இறைவன் என்றார்கள்
ஈசனும் நல் ஆசானும் அருகருகே ஆனார்கள்
தேவனிற்கடுத்தவன் ஆசிரியன் என்றாச்சு
என்றாலும் இன்று கரிநாளாய்ப் போயாச்சு
மாசறக் கற்பித்ததால் ஆசிரியன் என்றும்
கல்விக்கே அதிபதியாதலால் குரு என்றும்
பல்வேறு வார்த்தைகளால் அற்சிக்கப்படும் ஆசிரியர்க்கு
ஏன் இனிய நல் வாழ்த்துக்கள்
எங்குதான் இல்லை ஆசிரியர்கள்?
பாடல் என்றால் பாடலாசிரியர்
கதை என்றால் கதாசிரியர்
பதித்தவர் என்றால் பதிப்பாசிரியர்
இது வார்த்தை ஜாலமோ தத்துவப் பிதற்றலோ அன்று
எந்த மாணவனும் இதைக் காதினில் போட்டால் நன்று
அவனொருவன் தரும் ஆசிவேண்டும் என்று
பாடுகிறேன் நல்ல பாடல் இன்று
நிறைவாய் ஒரு செய்தி
தகுதிக்கு சன்மானம் கேட்டார்கள் இங்கே
தரத்தான் முடியாது சொல்லிட்டார் அங்கே
சட்டம் என்னும் இருட்டினுள் வாழும் ஆந்தைகளே
நல்ல மேய்ப்பான் இன்றி வாடும் நாங்கள் மந்தைகளே
பார்த்துடுவீர் ஒரு தராதரம்
வழங்கிடுவீர் நல்ல கௌரவம்
தயை கூர்ந்து தவிர்த்துடுவீர் ரௌத்திரம்
குருவின் முன் நீர் எம்மாத்திரம்
இப்போது இந்தக் கவிதையைப் பார்த்தால் எனக்கு சிரித்துக்கொண்டே அழத் தோன்றும். சிரிப்பு நான் எழுதிய கவிதை என்பதால் வருவது அழுகை? நம் ஆசிரியர்களின் வியாபாரமயமாக்கப்பட்ட கற்பித்தலை நினைத்தால் வருவது.

No trackbacks yet.