பறவைகளின் காதல்
பார்ப்பதற்கு ஜாதியில்லை
பார்த்திருக்க நேரமில்லை
பார்த்தவுடன் பற்றி விட்டால்
பர்த்திருக்கத் தேவையில்லை.
கல்விதகமை கட்டாயமில்லை
சீதனமும் கேட்பதில்லை
சீர்வரிசை செய்வதில்லை
வெட்டியாய் இருப்பதில்லை
வேறு துணை வேண்டவில்லை
கலவரங்கள் வருவதில்லை
புகைப்படங்கள் பிடிப்பதில்லை
குடி போதை அறிவதில்லை
புகைப் பழக்கம் புரிவதில்லை
முக அழகு முக்கியமில்லை
நிற அழகு நிரந்திரமில்லை
புஜ அழகு புரிந்துவிட்டால்
நிஜ அன்பு மறைவதில்லை
வைத்தியர் யாருமில்லை
வைத்தியமும் தேவையில்லை
சொத்திருக்கத் தேவையில்லை
சொத்து சேர்க்கும் தேவையும் இல்லை
சொந்தங்கள் சுமையும் இல்லை
பந்தங்கள் பாரமில்லை
எல்லைகள் இங்கு இல்லை
ஏரோ பிலேனும் தேவையில்லை
பறவைகள் செய்கிறதாம்
பெரியாரின் புரட்சித் திருமணம்

nice da