கழிப்பறை alias டாய்லெட்
“காலை எழுந்தவுடன் முக்கு இல்லை நாள் முழுவதும் கக்கு” என்று பாரதியார் சொல்லாவிட்டாலும் நான் சொல்கிறேன். எல்லாம் சரி காலையில் எங்கே முக்குவது? சாட்சாத் டாய்லெட்டில்தான். அதனால் இந்த டாய்லேட்டை வெறும் கழிப்பறையாக கேவலமாக பார்க்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பதிவு எழுதப்படுகிறது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது எனக்கு ஒரு 4 / 5 வயதிருக்கும் அப்போதெல்லாம் எங்கள் வீடு டாய்லெட்டை கழுவ ஒருவர் வருவார் எங்கள் வீதியே அவரை ஒரு போக்கிரியைப் பார்ப்பது போல பார்க்கும். (விஜயின் போக்கிரியை விட இந்தப் போக்கிரிக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பது வேற விஷயம்) ஆனால் இப்ப இங்கிலாந்துக்கு அள்ளுப்பட்டு போன எங்கட மாணவ சமுதாயம் என்ன செய்யுது? வைத்துப் பாட்டுக்காக டாய்லெட்டை தெய்வமாக மதிச்சு கழுவுறாங்க! ஏன் வெள்ளைக்காரன் இருந்த ‘அது’ தங்கமா வருமோ? இல்லை நம்மாளு ‘இருந்தது’ பித்தளையா இருந்திச்சா? தெரியலப்பா தெரியல!
அட இந்த வெளிநாட்டுக்காரன் சோலிய விடுங்கட நம்மூர்ல என்ன நடக்குது. பள்ளிப் பக்கம் எண்டா சொல்ல வேண்டாம்! அதிகமா அடிக்கிற ஆசிரியர்களையும் ஓவரா நடிக்கிற ஆசிரியைகளையும் பற்றி பதிஞ்சு வச்ச சுவரல்லவா? ஆங்கில டீச்சருக்கு வரலாற்று டீச்சருடன் காதல் என்று கிறுக்கிய காவியப் பதிவேடல்லவா டாய்லெட். இத்தனைக்கும் அந்த டீச்சருக்கு இந்த டீச்செற கண்டா காதால புகை வரும் என்றது வேற விஷயம். அது மட்டுமல்ல கல்யாணம் கட்டாத டீச்சர்மார கண்டு பிடிச்சு அவங்களுக்கெல்லாம் தாலி பாக்கியம் கொடுத்த புன்னியவான் தாண்டா இந்த டாய்லெட். அவனவண்ட அம்மா அப்பா பத்தி அவனுக்கே தெரியாத ‘பல’ விஷயங்கள தந்த கலைக் களஞ்சியம் இந்த டாய்லெட். பொதுவாக இந்த கலைக்களஞ்சியத்தின் பதிப்பாசிரியர்கள் தன்னடக்கம் காரணமாக தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை, மாறி வெளிக்காட்டினால் பதிப்பாசிரியர்களின் சவ அடக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இத விட ஜோரான தகவல் ஒன்று தாறன். நான் ஒரு gay என்று SLIIT டாய்லெட்டில் எழுதி வைச்சத பார்த்துதான் எனக்கே அந்த விஷயம் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்(நான் hetero என்பதை கவனிக்க). So, அவனவனப் பத்தி அவனுக்கே தெரியாத விஷயங்களை தரும் Wikipedia என்றும் இதை சொல்லலாம்.
ஆ! மறந்துட்டன், இது புகை போக்கியாகவும் தொழிற்படும். பல ஆபீஸ்களில் புகைகத் தடை. பல புகை விடுபவர்கள் (புகை பிடிப்பவர்கள் என்பதை விட இது பொருத்தமானது என்பது ஏன் கருத்து, தமிழ் ஆர்வலர்கள் கவனிக்க; நான் ஒரு டமில் ஆர்வலன்.) இங்கே இருந்து ஆனந்தமாக புகைவிடுவார்கள். சமயங்களில் புகை ஓவரா வந்து fire alarm அடிப்பதும் உண்டு.
அடங்கொய்யால, இது நம்மட காதல் பறவைகளின் வேடந்தாங்கல். உம்மா குடுக்கணும் என்டா எங்க போறது? பப்ளிக்கில ககுடுக்கலாம்தான் ஆனா நம்மாளுகள் எல்லாம் காணாதத கண்ட காக்கா மாதிரி வாய பிளப்பாங்களே? ஆக பைசா செலவில்லாம ஒரு பைசா கோபுரமே கட்டலாம். படிப்புக்கும் உதவிசெய்யும் ஜட்டிக்குள் பிட் செருக, செருகிய பிட்டை வெளியே எடுக்க என்று பல்வேறு educational activitiesல contribute பண்ணும்! இது ஒரு வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர், கஞ்சா பொட்டலம் கடத்த, பலான CD பரிமாற, Nintendo உபகரணங்களைப் பதுக்க, சினிமா பாட்டுக் கொப்பிகள் விக்க என்று ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது. தனக்குத்தானே மரண தண்டனைகள் வழங்குவதும் தற்போது அதிகரித்துள்ளதாக அறிகிறேன். சினிமா தொழிற்பேட்டையில அதிகமா விக்கிற மூவி எது? இந்த டாயலேட்ல கள்ளமா எடுக்கிற மூவிதான். த்ரிஷா குளித்தல், hidden camera எண்டு எத்தனையப் பாத்திருப்பீங்கள். உயரமாவதற்கும் இது உதவி செய்யும் என்று விஞ்ஞான பூர்வமா நிரூபித்திருந்தாலும் (எட்டி எட்டிப் பார்த்தால் உயரம் அதிகரிக்கும்) எட்டிப் பார்த்து மாட்டுப்பட்டால் முட்டி பிரிய அடித்தால் உயரம் குறையத்தனே செய்யும்?
வேற எதாச்சும் இருந்த அறியத்தாருங்கள் உடனே போட்டுவிடுரன். காலையில் மறக்காம தினமும் முக்கினா வயித்து வழியால முனகத் தேவையில்லை என்று சொல்லி முடிக்கிறான்!


ஹி ஹி…
வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பற்றிப் பகிர்ந்தமைக்கு நன்றி…
நல்லா இருந்திச்சு….
)
நன்றி கோபிகிருஷ்ணன், இந்த பேரோட இப்படி ஒரு நல்ல மனசா?
//அவனவனப் பத்தி அவனுக்கே தெரியாத விஷயங்களை தரும் Wikipedia என்றும் இதை சொல்லலாம்
hie hie …
//நான் ஒரு gay என்று SLIIT டாய்லெட்டில் எழுதி வைச்சத பார்த்துதான் எனக்கே அந்த விஷயம் தெரியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
yaar antha nalla manasu padaichchan manusan ?
அந்த புன்னியமூர்த்தியைதான் தேடிக்கொண்டிருக்கிறேன்
எப்படி அய்யா வார்த்தை இப்படி அருவியாய் கொட்டுது.இதைப்பார்த்ததுமே பழைய நினைவுகளை கிளறி விட்டுது.அட்டகாசம்.கலக்குறீங்கள்.அதோட பலபேரு நான் விலை மாது எனது நம்பர் இது என்று தொலைபேசி நம்பர்களையும் எழுதி வைத்ததை பல டாய்லெட்டுகளில் கண்ட ஞாபகமும் வந்து தொலைக்குது எனக்கு.
அட இதே அனுபவம் எனக்கும் உண்டு! ஒரு முறை என் தொலைபேசி இலக்கத்தை எழுதிவிட்டார்கள். பிறகென்ன இரவு முழுக்க ‘இன்ப’ அதிர்ச்சிதான்
hahahhahahah very funnyyyyy… ur funny articles are more interesting than ur serious ones
Thank you… Unfortunately I like to discuss the serious matter but according to this business world I have to add funny matters in between.