வெள்ளையனுக்காய் குண்டு போட்ட யாழ்ப்பாணம்!

இன்றுவரை புலம்பெயர் தமிழர்களை பற்றி கேவலமாகவும், இளக்காரமாகவும் பல நகைச்சுவைகளை சொல்லிவரும் நம்மவர்களுக்கு இது சமர்ப்பணம். நான் அவுஸ்திரேலிய வந்து அதிகமாக சென்ற இடம் அநேகமாக இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்குதான். ஒரு காரணம் எனக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை ரெண்டாவது இலங்கையில் நம் பழைய மாணவர் சங்கம் இளையவர்களை எந்தளவுக்கு அணைத்துக்கொண்டது என்பதில் இருந்த சந்தேகமும்தான். ஒரு மாதத்தின் முன்பு ஆண்டு நிறைவுக் கூட்டத்துக்கு சென்ற போது வழக்கம் போல வீர முழக்கம் கேட்டது ஏற்கனவே கேட்டவைதானே என்று நான் அசட்டையாக இருந்தாலும் அன்று கேட்ட ஒரு விடயம் என்னை முழுக்க முழுக்க ஆச்சரியக் கடலில் தள்ளியது. இங்கிலாந்தின் முதாலவது அங்கீகரிக்கப்பட்ட போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணமாம் (Jaffna)!

நேற்று சும்மா நம் சுவின்பெர்ன் நூலகத்தில் மேய்ந்தபொழுது ஒரு புத்தகம் தட்டுப்பட எடுத்து வாசித்தால் அது 100 க்கு 100 வீதம் உண்மை. கதை இப்படி போகிறது பாருங்கள்.

முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் (தற்போது 985,000 குதிரைவலு) இயங்கி வந்தன. மரம், துணி, வயர்களால் உருவாக்கப்பட்ட இவை உலகப் போரின் முன் யுத்தத்திற்காய் பாவிக்கப்படவில்லை. முதலாம் உலகப்போரின் போது எதிரிகளை வேவு பார்க்கவும், குண்டுவீசவும் சிறந்த பொறியாக விமானம் கருதப்பட்டது. எனினும் அவற்றின் வடிவமைப்பின் காரணமாக அவை எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகின. விமானத்தை உருவாக்கும் திறன் ஒருபுறம் இருக்க அதை உருவாக்க தேவையான பணம் இன்றித் திணறியது இங்கிலாந்து அரசு. உடனே தன் காலனித்துவ நாடுகளுக்கு இந்த செய்தியை அனுப்பி வைத்தது. வரிகள் மூலமாக இந்த பணத்தை திரட்ட முடியாது என்று அறிந்த மலேசியாவை நிர்வகித்த டாக்டர். அல்மா பேக்கர் என்பவர் “போர்விமானதுக்கு உதவி செய்” (fund-a-fighter-plane) என்ற பிரசாரத்தை ஆரம்பித்தார். இந்த பிரசாரம் அதிக பணம் தருபவர்கள் ஆசைப்படும் பெயர் அந்த விமானத்துக்கு வைக்கப்படும் என்றும் உறுதி கூறியது. யாழ் மல்லாகத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு. சுப்ரமணியம் அவர்கள் இந்த பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு யாழில் இருந்து அன்றே மலேசியாவில் குடியேறிய தமிழர்களிடம் பணம் சேர்த்து F.E.2b ரக விமானம் ஒன்றை பரிசாக அளித்தார். அன்றா நாளில் இதற்காக கிட்டத்தட்ட 2250 ஸ்டெர்லிங் பவுண்ட் சேர்க்கப்பட்டது.

இந்த விமானம் இரட்டை சிறகுடைய (biplane ரகம்) இரண்டு பயணிகளை கொண்டு செல்லக்கூடிய, குண்டு போடவும், அதே நேரம் துப்பாக்கிச் சமரிலும் ஈடுபடக்கூடிய விமானமாக காணப்பட்டது. ஈழத் தமிழர்களால் நிதி உதவி அளிக்கப்பட்டதாலும், வரலாற்றில் நம் பெயர் நிலைக்கும் என்ற நம்பிக்கையிலும் இவ் விமானத்திற்கு Jaffana என்று நம்மவர்கள் பெயர் சூட்டினார்கள். பிரித்தானியாவின் அரச விமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட Jaffna ஜெர்மனியர்களின் குண்டு மழைக்குள் தீரமாக நுழைந்து பேரழிவுகளை ஏற்படுத்தி முதலாம் உலகச் சமர் முடிவில் அருங்காட்சியத்தில் ஓய்ந்தது. கடல் கடந்த எங்கோ ஓர் தேசத்தின் நூற்றாண்டு கடந்து கற்பழிக்கப்பட இருக்கும் ஒரு ஊரின் பெயரில் உள்ள விமானம் தங்களை இந்தளவு ஆட்டிப்படைக்கும் என்று ஜெர்மனியர்கள் கனவிலும் நிலைக்கவில்லை.

கடந்த சில தசாப்தங்களில் மட்டுமல்ல நூற்றாண்டு கடந்தே போரில் ஆர்வமுள்ளவர்களாக ஈழத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று. உடல் வலிமை தேவைப்பட்ட போது உடலாலும், அறிவின் பலம் தேவைப்பட்டபோது அறிவாலும், நிதித் தேவைகளில் நிதி வழங்கியும் அவர்கள் மறவர்களாகவே வாழ்ந்தார்கள் போலும்.

 இன்று நாங்கள் இங்கிலீசு பேச ஆசைப்பட்டு இங்கிலாந்தில் கழிப்பறை கழுவினாலும் இங்கிலாந்து அர மானத்தை அன்று காத்தவர்கள் நாங்கள்தான். கதை மறைக்கப்பட்டுவிட்டது, இன்றைக்கு உங்களை நாட்டை விட்டுப் போகச்சொன்னால் இந்தக் கதையை சொல்லிவிட்டு வாருங்கள். இது கட்டளை அல்ல எச்சரிக்கை!

இதை வாசிதுவிட்டும் PR கல்யாணம் கட்ட, pizza போட, சாமான் நிறுக்கப் போறவங்களுக்கு ஒரு கேள்வி. ஏன்டா இன்னும் உயிரோட இருக்கீங்க?

    • Pinky
    • ஜனவரி 26th, 2012

    I am so Proud to tell that my native place is jaffna

  1. Every native of jaffna should be proud of this

    • Socretees
    • ஜனவரி 28th, 2012

    ஒரு பிளேனுக்குக் காசு கொடுத்திருக்கிறாங்கள் அவ்வளவு தானே? ஏதோ ரைட் சகோதரர்கள் ரேஞ்ச்சுக்குச் சொல்லுறீங்க? பிளேனைச் செய்து கொடுக்கவில்லையே? நீங்க வெளிநாட்டுக்கு ஓடிப்போய் இருந்து கொண்டு தமிழன் யுத்த உணர்வோடு இருக்க வேணும் எண்டு பிரசாரம் செய்கிறீர்களா? கடைசியில் ஒரு வாசகம் வேறு. அதுக்கு முதலிலை நீங்கள் யாருக்கு கழுவிறீங்கள் எண்டு யோசிக்க வேணும்.

    • நல்லது.. தமிழன் யுத்த உணர்வோடு இருக்க வேணும் என்று நான் என்றும் சொன்னதில்லை.. நான் போனது உயர்கல்வி முடிக்கவே… மீண்டும் நாடு திரும்பினால் நீங்கள் இந்த கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, இன்று பணப்பரிமாற்றத்தில் ஆதிக்க நாடாக இருக்கும் இங்கிலாந்துக்கு நாங்கள் அன்று பணம் கொடுத்திருக்கிறோம் என்பதுதான் என் கருத்து, யுத்த விமானம் கொடுத்தது அல்ல.

      //அதுக்கு முதலிலை நீங்கள் யாருக்கு கழுவிறீங்கள் எண்டு யோசிக்க வேணும்.
      நானும் தவறு செய்யலாம் நான் மகாத்மா அல்ல.

  2. இங்கிலாந்துக்கே காசு குடுதிருக்கிரம், அதான் பெருமை.

  3. இங்கிலாந்துக்கே காசு குடுதிருக்கிரம் அவ்வளவுதான்.

  4. வாழ்த்துகள் நண்பா . ஆய்வுக்கும் அழகான தகவலை தேடி பகிர்ந்து உதவியமைக்கும் . இது போன்ற வரலாற்றை இணையத்தில் ஏற்றியமை மிக மிக மகிழ்ச்சி . :)

    @socretees பெயரில் மட்டும் சோக்கிரடீஸ் இருந்தால் போதாது :-)

    • நாங்கள் செய்வதை ஒழுங்கா செய்வம் சுதா! நீங்களும் ewow.lk ஐ ஒழுங்கா கொண்டு போங்க

    • Socretees
    • ஜனவரி 28th, 2012

    இங்கிலாந்து அரசுக்கு பணம் கொடுத்ததில் என்ன பெருமை இருக்கிறது? புண்ணியம் கிடைத்தது என்கிறீர்களா?

    // நான் போனது உயர்கல்வி முடிக்கவே…

    நீங்களும் ஏதோ ஒரு தேவைக்காகத்தானே போயிருக்கிறீர்கள்? அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அப்பிடி இருக்கும் போது மற்றவனைப் பார்த்து ஏன்டா இன்னும் உயிரோட இருக்கீங்க எனக் கேட்பது சுயநலமான, மனிதாபிமற்ற, மனதைப் புண்படுத்தும் செயல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் மகாத்மா அல்லாத போது மற்றவன் மகாத்மாவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

    தமிழர்கள் நிறையத் துறைகளில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். எண்ணற்ற சாதைனைகளைப் புரிந்த்திருக்கிறார்கள். நீங்கள் அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், மாறாக பணக்காரன் சண்டை பிடிக்கிறதுக்காக நாங்களும் பணம் கொடுத்த கதைகளை எல்லாம் ஆராய வேண்டாம்.

    • பொருளியளிலும் சாதனைசெய்வது சாதனைதான். உங்கள் பேச்சு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது. எல்லாப் பதிவர்களும் உங்கள் கருத்துகளை அப்படியே விடுகிறார்களா என்று தெரியவில்லை. நான் கொஞ்சம் ஜனநாயகவாதி எதை வேணும் எண்டாலும் கிறுக்குங்கள்.

    • ramya
    • பெப்ரவரி 5th, 2012

    awesome …. keep it up

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 577 other followers