நின் உயிருள்ள நிழற்பிரதி தாராயோ?


சிலர் ஏன் இருக்கிறார்கள் என்று கேள்வி வரும் சிலர் எவ்வாறு இப்படி இருக்கிறார்கள் இன்று ஒரு பிரமிப்பு வரும். ஆசிரியர் வேலுபிள்ளையும் அவ்வாறே எனக்குள் ஒரு பிரமையை ஏற்படுத்தியவர். அவருடைய பிரியாவிடை வைபவத்தில் வெளியிடப்பட்ட மலரில் வெளிவந்த எனது கவிதை. இலங்கையில் இருந்திருந்தால் இந்தக் கவிதையை நானே சிலவேளை இதை மேடையில் வாசித்திருப்பேன். இதோ கவிதை!

 

 

கற்க வந்தவர் கல்லாவிடில் எனக்கென்னவென்று
tution கல்லாவை நிறைத்தலே தன் கடமையென எண்ணாமல்
பல page இருக்கும் syllabus ஐ எல்லாம்
சுகமாகச் சொல்வார் அதை சுமை என எண்ணாமல்

நமது தேவைக்கு வித்தக விநாயகர்
விநாயகர் தேவைக்கு வேலுப்பிள்ளை ஆசிரியர்
24 மணிநேரம் பணம் வழங்கும் ATM
வித்தியாசம் ஒன்று account இல்லாமல் பணம் வரும்

இந்துவின் மைந்தரெல்லாம் இரண்டு மணிக்கு போவார்கள்
இருக்கிற காவலாளியும் நாலுக்கு மேல் நித்திரைதான்
இருட்டோட இருட்டாதான் இவர் வீடு போய் சேர்வாராம்
சந்தேகம் டீச்சர் பேய்கெல்லாம் பயமில்லையா?

சட்டெனக் கைதட்டி சான்றோர்கள் சிரித்தாலும்
பட்டெனக் கனத்தது மனம் தொலை தூரம் அப்பாலே
வட்டுக்கோட்டை கல் வைத்துக் கட்டிய கோட்டை
ஏற்றியது தீபமாய் இந்து மைந்தர்களின் ஏட்டை

கணப்பொழுதில் தாள் நிறைக்கும் கவிவரிகள்
இன்று தாயவளை நினைக்கையிலே வரவில்லையே?
இவள் உற்றவரை கண்ணறியா குறை நிறைகள்
ஓய்வு பெற்றதுமே தெரிவதொன்றும் புதிரில்லையே

இருமுறை தந்தார்களாம் ஈழத்தின் உச்ச ஆசான் விருதை
விருதுகள் சொல்லுமோ இவ் வித்தக ஆசான் கிருபை
இன்றுவரை இந்துவின் மண்ணில் இவர் சிந்திய வியர்வை
நூற்றாண்டு கடந்து சொல்லுமாம் நம் ஆசிரியர் உயர்வை

ஆசிரிய மரபுக்கு இலக்கணம்; தொழில் தர்மத்தின் இலக்கியம்
நன்மை தீமை பகுபதம்; மாணாக்கரை என்றும் பாகாப்பதம்
உற்ற உதவி தரும் உரிச்சொல்; உறவை இணைக்கும் இடைச்சொல்
மங்கையர் கழகத்து மலர்ச்சொல்; திருக்கன்னியர் குடும்பத்தின் முறைச்சொல்

இந்துவின் உயிராம் அதனால் உயிரியல்
நமக்காய் திக்கெட்டும் திரிந்ததால் இயற்பியல்
காசாளும் திறமை பார் இவர் கற்கவில்லை கணக்கியல்
அடடா அடடா இவரிடம் தோற்றுப் போனதே வேதியல்

கெட்டவரை மறந்து அட்டவணை வரைந்தாய்
வேலைப் பளுவிலும் கற்பிக்கவா மறந்தாய்?
நிகரில்லா பிதாமகளே உந்தன்
ஓய்வு சிறக்கட்டும் விநாயகர் துணை நிக்கட்டும்

நின்றவரை நின் சேவை செவ்வனே செய்தாய்
சேவை ஒய்வதனால் அதில் வெற்றிடமும் வைத்தாய்
புதிய கதை தொடக்க அவ் வெற்றிடத்தை மறைக்க
நின் உயிருள்ள நிழற்பிரதி தாராயோ?

    • Pinky
    • பெப்ரவரி 11th, 2012

    Good job keep it up

    • pinky
    • பெப்ரவரி 12th, 2012

    //உற்ற உதவி தரும் உரிச்சொல்; உறவை இணைக்கும் இடைச்சொல்
    மங்கையர் கழகத்து மலர்ச்சொல்; திருக்கன்னியர் குடும்பத்தின் முறைச்சொல்// # puditha line#

    un pani thodarattum

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 577 other followers